Categories
தேசிய செய்திகள்

“கார்ல வந்து என்ன கடத்திட்டு போய்ட்டாங்க”… அப்புறம் இதுதான் நடந்துச்சு… சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!!

மைனர் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் தாடி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நண்பனான வாலிபர் ஒருவர் காரில் வந்து சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் ஒரு வீட்டில் அந்த சிறுமியை அடைத்து வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுபற்றி அந்த பெண் மங்களூரு டவுன் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |