ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்துள்ளார் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் நெடுங்கோட்டை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான அஸ்வின் ராம் உழகவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். பி.இ ஆட்டோமொபைல் படைத்துள்ள இந்த இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.அப்படி வீட்டில் இருந்த காலத்தில் அந்த நேரத்தை பயனுள்ளதாக்கி ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது தொடர் முயற்சிக்கு வெற்றியும் கிட்டியது, அதன்படி இந்த டிராக்டரை ஆன் செய்து வயலில் இறக்கி விட்டு 100 அடி தூரத்தில் நின்று கொண்டு ரிமோட் மூலமாக ஆப்பரேட் செய்யலாம். டிராக்டர் ஒருவேளை சரியான பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு செல்லும் பட்சத்தில் எஞ்சின் தானாக ஆஃப் ஆகி விடும் வகையில் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.