Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.

இதனால் அடுத்த 5 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நகர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு மற்றும் நிக்கோபார் தீவுகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று தமிழகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்,கொங்கன் மற்றும் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவின் உட்புற பகுதிகள், கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்தமான் கடல், தெற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |