Categories
தேசிய செய்திகள்

நடிகர் ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு மீது புதன்கிழமை விசாரணை!!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் கைது செய்யப் பட்டிருக்கக் கூடிய பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேர் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தற்போது ஒருபுறம் விசாரணை, மறுபுறம் ஆர்யன் கான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஜாமீன் மனு கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை என்பது நடைபெறுவதாக இருந்தது..

இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறிப்பாக ஆர்யன் கான் இந்த வழக்கில் வேண்டுமென்றே தன்னை என்சிசி அதிகாரிகள் தொடர்பில் வைத்திருப்பதாக கூறி தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்..

அதே நேரத்தில், இந்த வழக்கு விசாரணை தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், கூடுதல் ஆவணங்கள் பதில்மனு உள்ளிட்டவைகள் தாக்கல் செய்ய  இருப்பதால் இது தொடர்பான வழக்கை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சார்பில் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது..

இப்படி இரு தரப்பும் வாதங்கள் பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், நீதிபதி இந்த வழக்கை வருகிற புதன்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.. இதனால் ஆர்யன் கான் தொடர்ச்சியாக சிறையில் இருக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வருகிற புதன் கிழமை அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வழக்கு விவரங்கள், கூடுதல் பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவைகள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.. இது ஒருபுறமிருக்க தொடர்ச்சியாக இந்த வழக்கில் கூடுதலாக சில நபர்கள் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |