இலங்கைக்கான போட்டிகள் பல நாடுகளில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள் உட்பட அதிகாரிகள் 44 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மல்யுத்த வீரர்களுக்கு தற்போது இருக்கும் தலைவரான, சரத் ஹேவாவிதாரன், போட்டிகள் முடிந்த பின், குழுவினர் தலைமறைவாகிவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது, இலங்கை மல்யுத்த வீரர்களின் அணி, நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரத்தில், கடந்த 2ஆம் தேதியிலிருந்து, 10 ஆம் தேதி வரை, 72 நாடுகள் கலந்துகொண்ட உலக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற சமயத்தில், தலைமறைவாகியிருக்கிறார்கள்.
ஆனால், இது போன்று தலைமறைவாகியிருந்த வீரர்கள் பலர் மற்றும் அதிகாரிகள், தற்போது, நாடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அணியில் உள்ள குடாதந்திரிகே டொனால்ட் இந்திரவன்ஸ், மீண்டும் நாட்டிற்குள் வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மல்யுத்த வீரர்களுக்கு தற்போதுள்ள தலைவர், கூறியிருக்கிறார்.