இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்போது திண்டாடி வருகின்றனர். இதன் காரணத்தினால் டெல்லியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியின் மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது, “எரிசக்தி தட்டுப்பாட்டில் அரசியல் சூட்சமம் இருப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை கொரோனா இரண்டாவது அலையின்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாக கருதப்படுகிறது.
மேலும் எங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 3.5 மடங்கு அதிகமாகவே எங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். ஆனால் தற்பொழுது எங்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை. இதுகுறித்து மத்திய அரசானது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மின் உற்பத்தி ஆலைகள் முழு அளவில் இயங்காத நிலையில் கூட நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது . மின்சாரத்தை மத்திய அரசிடமிருந்து நாங்கள் பெறவில்லை என்றால் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லி முழுவதும் மின்வெட்டு ஏற்படும்” என்று கூறியுள்ளார்