பிரபல முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாள்களுக்கு முன் தான் நடந்து முடிந்தது. இதில் கலந்துகொண்ட மானசி, முதல் 6 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் குரலுக்கு ரசிகர்கள் பலர் உண்டு. இந்நிலையில் மானசி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் டாக்டர் படத்தின் சிறப்பு காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.