மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து அங்கிருந்து தொடர்ந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வரும் சம்பவங்கள் நீடித்து வருவதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தக்கலை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி இளைஞர் நிர்வாகி, “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சீமான் வந்தால் சமாதி கட்டுவோம் என சொன்னீர்களே, கட்டுடா வந்து கட்டுடா. இங்க பார் ஒண்ணு நீ கட்டு இல்லை நாங்க வந்து கட்டுவோம். தொட்டுருவியா மகனே மேடை போட்டு கால் மேல் கால் போட்டு அண்ணன் உட்காந்து இருக்கிறார். இது யார் கோட்டை?” என ஆவேசமாக பேசியுள்ளார்.