மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது ஈகோவை அழிக்க வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை கேட்டு எழுதிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் ராஜ்குமார் யாதவ் என்பவர் தனது ஈகோவை அழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க போவதாகவும் அதற்காக தனக்கு விடுமுறை வேண்டும் எனவும் கேட்டு விடுப்பு விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார்.இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
ராஜ்குமார் யாதவ் அந்த கடிதத்தில் எழுதியதாவது,” எனது முன்ஜென்மம் குறித்து எனக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் கிடைத்தது. அதன்படி முற்பிறவியில் நான் ஒரு மகாபாரத கதாபாத்திரமாக இருந்துள்ளேன். ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி என்பவர் எனது நண்பன் நகுலன் ஆகவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ‘சகுனி மாமா’ வாகவும் இருந்தனர். மேலும் எனது ஆன்மீகத் தேடலுக்காக எனது ஈகோவை அழைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பிச்சை எடுக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.