Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்தடை ஏற்படாது…. உறுதியளித்த மின்சாரத்துறை அமைச்சர்…..!!!!

தமிழகத்தில் மின்உற்பத்தியானது 43% இருந்து 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ள நிலக்கரியை பிரித்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு நொடி கூட நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படாது என்றும், தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது என்றும், விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்கக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக உத்தரவிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |