சென்னையின் பல்லாவரத்தில் உள்ள பம்மல் பாத்திமா நகரில் வெள்ளைச்சாமி தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக ‘ஆல் அவுட்’ என்ற கொசு மருந்தை குடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அழைத்துச் சென்ற போது எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.மேலும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கிஷோரின் பெற்றோர்கள் முதலில் கொண்டு சென்ற தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் சுபாஷ் வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவர் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் நடத்தி வந்த சாய் கிளினிக்கை பூட்டிவிட்டு மருத்துவர் சுபாஷை தேடி வருகின்றனர்.