Categories
அரசியல்

அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி…. மாறப்போகும் தலைமை ? பரபரப்பாகும் தமிழக அரசியல் …!!

எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும் என சொல்லி புகழேந்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

மோடியின் கைப்பாவையாக தான் அதிமுக ஆட்சி இருந்தது என்று சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி,  இப்ப கூட அதுதான் நடக்கிறது. வாக்குப்பதிவு போய்க்கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்று கேட்டீர்கள் என்றால், என்ன தெளிவு இந்த தேர்தலில் ? யாருடன் கூட்டணி என்று சொன்னார்களா ? ஒரு சிறிய கட்சி 3, 4% இருக்கிற கட்சி பாமக  தைரியமாக சொல்லிவிட்டது, டாட்டா பாய் பாய்.

4 சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ராஜ்யசபை உறுப்பினர்களை பெற்ற கட்சி, அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய 23 இடங்களை பெற்ற கட்சி டாட்டா பாய் பாய்  சொல்லிட்டு. பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடம் ? கூட்டணி இருக்கா ? ஒன்றும் கிடையாது. எந்த யுக்தியும் இல்லாமல், வியூகமும் இல்லாமல், ஆட்சி மன்றக் குழு அறிவிப்பும் இல்லாமல் அம்மா வேண்டாம் என்று சொன்ன கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற முடியும் ?

இந்த தேர்தல் முடிந்ததும் பாருங்கள், ரிசல்ட் என்ன வருகிறது என்று ?  இந்த நிலை தொடரும். ஆகவே தான் சொன்னேன்… நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன், திராவிட ஐடியாலஜியில் வந்தவன்.இந்த தலைமை மாறினால் எல்லாம் சரியாகப் போய்விடும். 100% தொண்டர்கள் புரட்சி இந்த கட்சியில் ஏற்படப்போகிறது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும். புதிய தலைமை வரும், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தலைமை அஇஅதிமுகவிற்கு வந்திருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |