ஓ.பி.எஸ் சசிகலாவோடு பேச வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தலைமை மாறினால் எல்லாம் சரியாகப் போய்விடும். 100% தொண்டர்கள் புரட்சி இந்த கட்சியில் ஏற்படப்போகிறது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும். புதிய தலைமை வரும், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தலைமை அஇஅதிமுகவிற்கு வந்திருக்கிறது.
இதை ஓபிஎஸ் அண்ணன் முடிவு பண்ணி, அவர் சின்னமாவோடு பேசி அழைத்து வந்து புதிதாக எதாவது செய்தால்தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் இந்த ஆட்சி வந்திருந்தாலும் அவர் துணை முதல்வராக தானே இருப்பார். இப்போ சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரி இருப்பார்.
ஆகவே அவர் மாற்ற வேண்டும் மேடையிலே சொல்லிவிட்டு போவதெல்லாம் காற்றில் பறந்த மாதிரி போய்விடும். சசிகலா என்ன தவறு செய்தார்கள் ? எடப்பாடி பழனிசாமி சொத்தையா புடுங்கிட்டாங்க, சசிகலா. தெரியாமல் தான் கேட்கிறேன். அவர்கள் இல்லையென்றால் கோட்டையிலேயே சாதாரண விவசாயினுடைய குடிமகன் மூன்று , நான்கு முறை கொடியேற்றி இருக்க முடியாது, முதலமைச்சராக இருக்க முடியாது.
அன்றைக்கு அவர்கள் கையை நீட்டி சி.வி.சண்முகத்தை பார்த்து அவர் தன் முதல் அமைச்சர், வீரமணி பார்த்து அவர்தான் முதல் அமைச்சர், வேலுமணியை பார்த்து அவர் தான் முதலமைச்சர், தங்கமணியை பார்க்க அவர் தான் முதலமைச்சர் என்று சொல்லியிருந்தால் அவர் தானே முதலமைச்சர். அதனால்தானே காலில் விழுந்தார்,
நம்ம அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி. என்ன அவங்களுடன் மனக்கசப்பு ?உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளே சென்றார்கள், வெளியே வந்து விட்டார்கள். அதனால் நான் ஆதரிக்கப் போவதில்லை, நியாயத்தை பேசுகிறேன் என கூறினார்.