Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு வேடங்கள்…. மேளதாளத்துடன் ஊர்வலம்…. உற்சாகத்தில் பக்தர்கள்…!!

பக்தர்கள் வேடமணிந்து முத்தாரம்மன் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்லப்பாண்டியன் நகரில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடம் அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

மேலும் இவர்கள் வரும் வியாழக்கிழமையன்று இரண்டு பேருந்துகள் அமைத்து குலசேகரப்பட்டினத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

Categories

Tech |