யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைவர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பதிவு சாட்டை துரைமுருகன் மீது பந்தலூர் திமுக பிரமுகர் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழக முதல்வரை தவறாக விமர்சித்த வழக்கில் நேற்று துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.