ஆற்றில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 61 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருக்கும் ஆற்றில் 9 படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளன. அதிலும் அந்த படகுகளில் 200க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் படகானது வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது தீடிரென கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து படகில் பயணம் செய்த 200 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
மேலும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புக்குழுவினர் 61 பேரின் உடல்களை ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர். ஆனால் நீரில் 100-க்கும் அதிகமானோர் மூழ்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.