Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்பிக்கும் தேதி வருகின்ற 15ஆம் தேதி முடியும் நிலையில் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு வாரியம் மூலம் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் வேலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்விற்கு கடந்த. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மொழி சான்றிதழ் மென்பொருளில் மாற்றம்  செய்வதற்கும் மற்றும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளுக்காகவும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் அக்டோபர் 17 ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |