தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 31 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 5000- க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.