தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெங்காயம் விலையும் 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயை தொடும் என்று கூறப்படுகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.