தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பை இன்று அறிமுகம் செய்து அதன் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் காஜூ கட்லீ (250 கி) -ரூ.225, நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210, மோத்தி பாக் (250 கி) -ரூ.170,காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.275 மற்றும் காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210 ஆகியவை 500 கிராம் கொண்ட தொகுப்பு ரூ.425 விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர், விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள்அனைவரும் கால்நடைகளைப் பராமரித்து வருகின்றனர். அதிலிருந்து பாலை கறந்து அதை மக்களுக்கு சேர வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் ரூபாய் 25 கொள்முதல் செய்தது.
விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழக முதல்வர் உத்தரவுபடி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று ரூ.32 கொள்முதல் செய்தது. அது மட்டுமில்லாமல் அதை பிராசஸிங் செய்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொடுத்த நிறுவனம் ஆவின் நிறுவனம். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்கப்படும் என அவர் கூறியுள்ளார் .