உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை நம்பி 32 லட்சத்தை இழந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரே பெராலி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருவருடன் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் உங்களது செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அப்போது அந்த நபர் பெண்ணிற்கு பரிசுத்தொகையும் பணத்தையும் அனுப்பி உள்ளதாக கூறி, அதனை வரிப்பணத்தை மட்டும் கட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அவர் கூறிய சில நாட்களில் அந்தப் பெண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர் தங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை நீங்கள் வரி பணத்தை செலுத்தி எடுத்து கொள்ளும்படியும் கூறியுள்ளார்.
பின்னர் சில லிங்கை அனுப்பி அந்த பணத்தை இதில் கட்டும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் 32 லட்சம் வரை பணத்தை அதில் கட்டியுள்ளார். ஆனால் கடைசிவரை அந்த பார்சல் வரவே இல்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை ஏமாற்றிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.