பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல முன்னீர்பள்ளம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஊய்க்காட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வழிப்பாதை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இசக்கியம்மாள் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஊய்க்காட்டான் இசக்கியம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கியம்மாள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஊய்க்காட்டானை கைது செய்துள்ளனர்.