Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் இதை செஞ்சாலும்…. கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்…. அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக எல்லையோர மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று வாக்குறுதியின்படி தற்போது வரை 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் இருக்கின்ற எல்லையோர மாவட்டங்களில் எல்லாம் அரிசி எங்கேயும் கடத்தப்படக் கூடாது. அதற்கு அதிகாரிகள் துணை போனாலும் அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் சொல்கிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |