பொதுமக்கள் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டர், புரட்சித்தலைவி அம்மாவின் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன் சாகும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தான் இருப்பார்.
எங்கேயும் போகமாட்டார், சிறையில் இருந்து வந்தவர்கள் அப்போது ஏன் போகவில்லை அம்மாவுடைய நினைவிடத்திற்கு. அப்போது போகவில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக போகிறார். எல்லா வகையிலும் பொதுமக்களும் சரி, அதேபோன்று தொண்டர்களும் சரி ,தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட இவர் திடீரென்று வந்து நான் அங்கு போகிறேன் இங்கு போகிறேன் என்றால், எங்கே போனாலும் உங்கள் பின்னால் யாரும் வர மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.