Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குழியில் புதைக்கப்பட்ட சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பூ வியாபாரியான ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் வீட்டிற்கு திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாயமான ஜெகதீசை மீட்டு தர வேண்டும் என சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ உத்தரவின்படி மாயமானது கண்டு பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து மாயமான ஜெகதீசை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதில் ஜெகதீசின் நண்பர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் சிலரை ஜெகதீசை கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் சிவகாமி புரத்தில் நடந்த கோவில் விழாவில் வெளியூர் நபர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் ஜெகதீஷுக்கும் சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சிலர் ஜெகதீஷை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அவரை கொலை செய்து உடலை காரில் ஏற்றி நெல்லை-நாகர்கோவில் சாலையில் உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் டக்கரம்மாள்புரம் பகுதியில் புதைக்கப்பட்ட இடத்தில் பார்வையிட்டனர். அங்கு சமீபத்தில் குழி தோண்டி இருப்பதாக அடையாளங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் ஜெகதீசின் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |