Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2000…. புதிதாக பதிவு செய்வது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது.

அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் சிலர் இன்னும் இந்த திட்டத்தில் இணையாமல் உள்ளனர். அவர்களுக்காக அரசு புதிய வசதி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி www.pmkisan.gov.in.என்ற பிஎம் கிசான் வெப்சைட்டில் ’Farmers Corner’ என்ற பிரிவின் கீழ் ‘New farmer Registration’ என்ற வசதி இருக்கும். அதில் சென்று பயனாளியின் விவரங்களைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இது மாநில நோடல் அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படும். அதன் பின்னர்  நிதியுதவி கிடைக்கும். ஒருவேளை தகுதியுடைய விவசாயிகளின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் மாவட்ட வாரியான குறைதீர்ப்பு கண்காணிப்புக் குழு அதிகாரியை அணுகி தீர்வு காணலாம்.

Categories

Tech |