ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதனை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போது ஹனுமன்கர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவர் வீட்டில் அருகில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முகேஷ் குமார் ஜெகதீசை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் ஜெகதீஸ் அடிக்கடி அவரின் மனைவியுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் தனது நண்பருடன் சென்று அவரை கடத்தி வந்து ஒரு பண்ணை வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த ஜகதீசை அவரது வீட்டின் அருகில் எரிந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் ஜெகதீஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை, ஆட்கடத்தல் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைத் தாக்கிய 4 பேரை கைது செய்துள்ளனர்.