இயக்குனர் ராமும், நடிகர் நிவின் பாலியும் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் ரிச்சி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிவின் பாலி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராம் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது.
தற்போது ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம், நிவின் பாலி இருவருக்குமே இன்று பிறந்தநாள். ஒரே படத்தில் பணிபுரிந்து வரும் ராம், நிவின் பாலி இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து, அவர்களுக்கு படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.