Categories
தேசிய செய்திகள்

முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ்…. அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, ரூபாய் 5800 கோடிக்கு உலகின் முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான “ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்” நிறுவனம் நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம். சீனாவைச் சேர்ந்த “சீனா நேஷனல் ப்ளூஸ்டார்” குழுமத்திலிருந்து இந்த சோலார் சக்தி நிறுவனத்தை “ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட்” நிறுவனம் சுமார் 5800 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது தொடர்பாக, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஈ சி நிறுவனத்தை கையகப்படுத்தியதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஆர் ஈ சி நிறுவனத்தில் உலகம் முழுவதும் 13000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தபரிவர்த்தன நிறுவனம் தொடர்பான பரிவர்த்தனைகள் முறையாக நிறைவடைந்த பின், அவர்கள் ரிலையன்ஸ் குழும பணியாளர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடுத்த 3 ஆண்டுகளில், ரூ.75 ஆயிரம் கோடி செலவில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் புதுப்பிக்கத்தக்க  4 ஆலைகளை ஏற்படுத்திட ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜாம்நகரில் சுமார் 5000 ஏக்கரில் மெகா கட்டுமானத்தை ஏற்படுத்தி வருகிறது.

இக்கட்டுமானம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வளாகமாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர் ஈ(புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்) நிறுவனம், சோலார் பேனல்களை தயாரித்துவருகிறது
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1800 மெகாவாட் மின் உற்பத்தியை அளிக்கும் திறனுள்ள சோலார் பேனல்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவரை பத்தாயிரம் மெகாவாட் திறனுள்ள சோலார் பேனல்களை உலகம் முழுவதும் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |