தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வண்ணம் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16, ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆயுதபூஜைக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக வருடம்ந்தோறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளது.
ஆன்லைனில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகள் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருக்கிறது. இதைப் போன்று சென்னையில் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளிக்கு பலர் ஊருக்குச் செல்வதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நவம்பர் 1 முதல் சிறப்பு பேருந்துகள் செயல்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதையடுத்து முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை வழியாக வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும் பொதுமக்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்கள் என மொத்தம் 12 கவுண்டர்கள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தடுக்க பொதுமக்கள் புகார் அளிக்க கூடிய வகையில் 1800, 425, 6151, 044, 24749002 இந்த எண்களும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.