Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் “வரும் முன் காப்போம் திட்டம்”…. நாளை தொடக்கம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வருமுன் காப்போம் திட்டம் நாளை 50 இடங்களிலும், சென்னையில் இரண்டு இடங்களிலும், தொடங்கப்படுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி தடுப்பூசி முகாம்களின் மூலம் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகத்துக்கு தடுப்பூசிகள் செலுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.

இதையடுத்து ஒவ்வொரு வாரமும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். தடுப்பூசி முகாம் நடக்கும் சில இடங்களுக்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஊக்கமும், விழிப்புணர்வும், ஏற்படுத்தி வருகிறார். மழைக் கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண், இவற்றுக்காக தான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது உண்டு. வீடுகளுக்கு அருகே நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். பட்ஜெட்டில் அறிவித்தவாறு மழைக்காலங்களில் மருத்துவமுகாம் வழி நடத்தப்பட இருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Categories

Tech |