சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தியா பெண் ஒரு நாள் கனடா உயர் ஆணையராக பதவியேற்றுள்ளார்.
இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அலுவலங்களில் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கிஷான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தீபிகா என்ற இளம்பெண் கனடா உயர் ஆணையராக ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்றுள்ளார். மேலும் தீபிகா கனடா உயர் ஆணைய அலுவலகத்தில் உள்ளவர்களை காணொளி வாயிலாக சந்திக்கவுள்ளார்.
அந்த சந்திப்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சம உரிமைகள் வழங்குதல் போன்றவற்றை குறித்து கலந்து உரையாடவுள்ளார். மேலும் இந்த கலந்துரையாடலில் இந்தியாவுக்கான கனடாவின் இணை உயர் ஆணையரான Amanda Strohanனும் பங்கேற்கவுள்ளார். இவர்களுடன் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஜப்பான், பெல்ஜியம் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் UNICEFஇன் உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
குறிப்பாக மும்பையில் உள்ள கனடா தூதரக அலுவலகம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளின் சம உரிமைகளை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள முக்கிய கட்டிடங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்வது போன்று செய்துள்ளனர்.