திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரகாஷுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இலக்கியா தனது கணவரிடம் கோபித்து கொண்டு திருப்பூரில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து இலக்கியாவை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி பிரகாஷுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு வருமாறு பிரகாஷின் குடும்பத்தினரை இலக்கியாவின் தந்தை அண்ணா துரை என்பவர் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் திருவிழாவிற்கு செல்லாததால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலக்கியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.