மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல மனதில் மட்டும் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள். அது போதும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாகவே உழைக்க வேண்டியிருக்கும்.
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பேசும் பொழுது கொஞ்சம் நிதானம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரிடம் பாராட்டுகளையும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு செல்லும்பொழுது முக்கியமான வேலை செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முருகன் வழிபாடு உங்களுக்கு சிறப்புவாய்ந்த வழிபாடாக இன்று இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்