திருமண மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேமித்து வைத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை திடீரென்று திருமண மண்டபத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகின.
இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.