Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீங்க போட்டாச்சா…. மெகா தடுப்பூசி முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

சாலையோரத்தில் இருக்கின்ற கடைகளின் வியாபாரிகளிடம் தடுப்பூசி போட்டு உள்ளீர்களா என்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதுமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் சோளிங்கர் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மருந்தகம், பூக்கடை, பழக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல கடைகளிலும் விசாரித்து தடுப்பூசி செலுத்தாதவர்களை உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் போட்டுக்கொள்ளாதவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |