அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினரை கண்டதும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து டிராக்டரை சோதனை செய்து பார்த்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.