Categories
மாநில செய்திகள்

40 டிஎம்சி நீரை உடனே வழங்க…. கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் வழங்கப்பட்ட வந்துள்ள நிலையில் திடீரென இரண்டு மாதங்கள் நீரே வழங்கப்படாமல் உள்ளது.இதனால் தமிழகத்திற்கு இதுவரை வழங்க வேண்டியுள்ள காவேரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 53ஆவது கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நீர் பங்கெடுப்பு மற்றும் நீர் இருப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம் வரை 20 5.54 டிஎம்சி நீர் மற்றும் அக்டோபர் மாதம் 14 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என கர்நாடக மாநிலத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |