Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 21,000…. மாபெரும் தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்….!!

தீவிரமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 21,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 5-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில், 108 ஊராட்சிகளில் வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் குழுக்கள் மூலமாக கிராம செவிலியர் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட மருத்துவ குழுக்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலர் டிவி பரிசாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் இம்மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் 21 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Categories

Tech |