Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் கருட சேவை…. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்ப்பு…!!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கி திருப்பதியில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.

தொடர்ந்து மலையப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்கம் வைரம் மற்றும் பச்சை மரகத கற்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான கேலண்டர் மற்றும் டைரிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.

Categories

Tech |