நடிகர் விஜய்யின் மகன் பிரபல மலையாள நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான்.
சில நாட்களுக்கு முன் பட்டப்படிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் திவ்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் மிக வைரலானது. இந்நிலையில் சஞ்சய் மலையாள சினிமாவின் நடிகரான நிவின் பாலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.