சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மீண்டும் ஒருமுறை உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேற்றுமை வரக்கூடும்.
எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். வீண் வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் கடினமாகதான் உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்