Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு வகுப்புகள் நேரடி நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து 1- 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொள்ளபட்டுவருகிறது. இந்நிலையில் தொடக்கப் பள்ளிகள் திறப்பதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்து வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது என்றாலும் முற்றிலும் குறையவில்லை.மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்கப் பள்ளிகள் திறப்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய சிறப்பு விற்பனை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு  பேசிய அவர், தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் எனது மகள்/மகன் பள்ளிக்கு முழுமனதோடு அனுப்புகிறேன். கொரோனா தொற்று பற்றி அறிந்து அதற்கு ஏற்றார்போல் என் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைப்பேன். மேலும் பள்ளி தலைமையாசிரியர் கூறும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவேன் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட வேண்டும். அதன் பின்னர் எழுதப்பட்ட கடிதத்தில் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்று அவர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |