கன்னி ராசி அன்பர்களே..!! நல்லவர் செயலையும் தவறாகக் கருதும் சூழல் இன்று ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக்கூடாது. கவனமாக இருங்கள். இன்று மன வருத்ததுடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகளும் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
அதேபோல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்று உறவினர் வகையில் யோகம் ஏற்படும் நாளாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்தை செய்யும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் வெற்றி கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்