தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.அதில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43%மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்றம் சட்டசபை தேர்தல் போல மின்னணு ஓட்டு எண்ணும் வைத்து மூலமாக நடைபெறாமல் பழைய முறைப்படி 4 பதிவிக்கும் நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு அதில் வாக்காளர்கள் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போட்டு உள்ளனர்.
இந்தத் தேர்தல்க்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் எண்ணிக்கையின் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவதால் அனைத்து பகுதியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு 4000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும். ஓட்டுகளை எண்ணப்படும் அனைத்து ஏஜன்ட்களையும் போலீசார் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.
அதனைத்தொடர்ந்து ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இது தவிர பேனா,தண்ணீர் பாட்டில் மற்றும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி 20-ஆம் தேதி நடை பெற்று வெற்றி பெற்ற அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.