தமிழகத்தில்1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜிகே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2 வது அலை குறைந்துள்ளதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1-8 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மாணவர்கள் நலனில் அதிக கவனம் இருக்க வேண்டும் என்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் 1-8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 8ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் ஜிகே. வாசன் கூறியுள்ளார்.