மூளை இருந்தால் கோவிலை திறக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளர்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கொரோனா காலகட்டத்தில் முதல்வர் மகன் சினிமாவை பிரமோட் செய்து பாருங்கள் என சொல்லணும் ? எதற்காக சினிமா தியேட்டரை திறக்க வேண்டும் ? கர்நாடகாவில் கோவில் திறந்துருக்காங்க ? உடனே என்ன சொல்விங்க… ஐயோ கர்நாடகாவில் திறந்துட்டங்களா ? அது பிஜேபி ஆட்சி, சரி விடுங்க. கேரளாவில் திறந்தாச்சு… உடனே என்ன சொல்வாங்க ? அது கம்யூனிஸ்டு ஆட்சி. மகாராஷ்டிராவிலும் திறந்தாச்சு அங்கு வந்து என்.சி.பி காங்கிரஸ் ஆட்சி.
ஆகவே இந்த கட்டு கதைகளெல்லாம் விட்டுவிட்டு எல்லா இடத்திலும் கூட மத்திய அரசினுடைய கைடு லைன்ச ஃபாலோ பண்ணி கோவிலை திறக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதா ? மத்திய அரசினுடைய ஆர்டரை முழுமையாக படிக்க தெரியாதா ? போகாத ஊருக்கு வழி சொல்கின்றீர்கள். அதனால் இந்த ட்ராமா வை விட்டு விட்டு கோவிலை திறக்கவும்.
பத்து நாளைக்கு மேல நாங்கள் வருவது வருவதுதான், ஸ்தம்பிக்க வைக்கிறது ஸ்தம்பிக்க வைக்கிறது தான், தலைவர்களெல்லாம் வரமாட்டோம் 100 கிளைத்தலைவர் வரோம், எப்படினு நீங்க பாருங்க ? நீங்க சொல்றீங்க 50 ஆண்டு காலமாக நாங்கள் இருக்கிறோம் என்று, நீங்கள் ஐம்பது ஆண்டு காலமாக இருங்க. ஆனால் நாங்க ஐந்து வருஷமா தான் இருக்கிறோம், அசைத்து காட்டுறோம், தயாராக இருங்க வர்றது வர்றதுதான்.
உங்கள் பொய்களை மக்கள் மன்றத்தில் கொண்டு போகிறது கொண்டு போகிறது தான். இந்த பொய்யை சொல்லி 2 மீடியாவை வைத்துகொண்டு மாத்தி மாத்தி நீங்க ஆட்சி எல்லாம் பண்ணிட்டு இருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது, மத்திய அரசினுடைய ஆர்டரை படிச்சாச்சு, மத்திய அரசு கொடுக்கிற பர்மிஷனை சொல்லியாச்சு, சேகர்பாபு அவர்களுக்கு உண்மையாலுமே மூளை இருந்தால் கோவிலை ஓபன் பண்ணுங்க என தெரிவித்தார்.