Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்…. தீவிர சிகிச்சையில் பொதுமக்கள்…. கோட்டாட்சியர் ஆறுதல்….!!

வெறிநாய் கடித்தால் 47 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதி பேருந்து நிலையம் அருகாமையில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. இந்நிலையில் அந்த நாய்  அப்பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து அதை துரத்தி அடித்துள்ளனர். பின்னர் தோப்பு கோவில் உள்பட 5 பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்துக் குதறி உள்ளது. எனவே மொத்தமாக 47 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த முருகேசன் உள்பட 12 நபர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் சில நபரை வெறிநாய் கடித்த போது பொதுமக்கள் அதை அடித்து கொன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் பூங்கொடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சையில் இருக்கும் நபர்களிடம் நாய் கடித்தது குறித்து கேட்டறிந்து பிஸ்கட் மற்றும் பழம் போன்றவைகளை வழங்கியுள்ளார். அப்போது அவர்களிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |