வாக்குப் பதிவுகளை எண்ணவிருக்கும் மையங்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திமிரி ஒன்றிய வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது. அதன்பின் ஆற்காடு ஜி.வி.சி அறிவியல் கல்லூரியில் 5 சுற்றுகளாகவும், பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சுற்றுகளாகவும், சப்தகிரி பொறியியல் கல்லூரி 4 சுற்றுகளாகவும், கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 சுற்றுகளாகவும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சுற்றுவதாகவும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இதனையடுத்து 7 வாக்கு எண்ணும் மையங்களில் 2,811 அலுவலர்கள் பணியில் ஈடுபட இருக்கின்றனர். தற்போது வாக்கு மையங்களில் வேட்பாளர்கள் எவரும் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். பின்னர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.
இதனை தொடர்ந்து செல்போனை எடுத்து வந்தால் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டரில் கொடுத்து விட்டு உள்ளே வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தேர்தல் நடத்தும் அலுவலர், நுண் பார்வையாளர்கள் மற்றும் வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.