பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ஊராட்சி மன்றத்தில் தூய்மை பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அவர் மீது லாரி மோதியது.
இதனால் நிலைதடுமாறிய கமலாச் சாலையில் விழுந்த நிலையில் அவர் மீது லாரி ஏறி இறங்கியதினால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.